search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் தொகுதி"

    • எம்.பி.க்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 5 கோடி ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வகுப்பறை கட்டிடங்கள், மேசை வசதியுடன் கூடிய இருக்கைகள் என அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு 2019-ம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த க.செல்வம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    எம்.பி.க்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 5 கோடி ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த 2019-க்கு பிறகு கொரோனா நோய் தொற்று காரணத்தால் எம்.பி. தொகுதி நிதியினை கொரோனா நிதிக்காக மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டதால் தொகுதி மக்களுக்கான பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது 2021-2022-ம் ஆண்டிற்கான அரையாண்டு நிதி ரூபாய் 2 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அந்த நிதியினை காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் தொகுதி மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மழலையர்களுக்கான அங்கன்வாடி மைய கட்டிடங்கள், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகிய அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கான பொது அறிவு புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், அறிவியல் வளர்ச்சிக்கான புத்தகங்கள் என சமூக வளர்ச்சிக்கான புத்தகங்கள் மாணவர்கள் வளர்ச்சி பெறும் வகையில் அவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கி உள்ளார்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வகுப்பறை கட்டிடங்கள், மேசை வசதியுடன் கூடிய இருக்கைகள் என அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

    பள்ளிகளில் விழா மேடைகள் அமைப்பதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதேபோன்று பின்தங்கிய கிராமங்கள் வளர்ச்சி பெறும் வகையில் பொது நூலக கட்டிடம், பொது நியாய விலை கடை கட்டிடங்கள், பேருந்து நிழற்குடைகள், உயர் கோபுர மின் விளக்குகள் போன்ற தொகுதி மக்களுக்கான பணிகளை தேர்ந்தெடுத்து செய்வதால் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி முதலிடம் வகிப்பதாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது.

    ×